பதிவுகள்

                   ஊடகமும் உண்மையும்:
       
      பத்திரிக்கை என்றால் தற்பொழுது அரசியல் சாசனத்தின் கால்கள் ஆகிவிட்டது, அவர்கள் கட்சி சார்ந்த செய்திகளையே பதிக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் வாசகர்களும் தாங்கள் விரும்பும் கட்சியை பொறுத்துதான் பத்திரிகையை வாங்குகிறார்கள். இந்த சூழ்நிலையில் மக்கள் உலக நடப்பை பற்றி தெரிந்து கொள்வதை விட அந்த கட்சி சார்ந்த செய்திகளைத்தான் தெரிந்துகொள்கிறார்கள். தேவை இல்லாத செய்திகளை முதல் பக்கத்தில் போடுகிறார்கள், எதற்கென்றே புரியவில்லை. உதாரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆங்கில செய்திதாளில் முதல் பக்க செய்தியே என்ன தெரியுமா..? நமது இந்திய மட்டைபந்து(cricket) அணியின் தலைவர் தோனியும் அவரது மனைவியும் கடலில் நீச்சல் உடையில் குளித்து கொண்டு இருந்தனர். அதை புகைப்படம் எடுத்து முதல்பக்கத்தில் பதித்திருந்தனர், இது என்னகொடுமை...? அன்றைக்கு அதுதான் முக்கிய செய்தியா  என்ன...? இதை கண்டிப்பாக நமது தோனியும் விரும்பியிருக்கமாட்டார்.
        
      நாம் செய்தித்தாளை எதற்கு வாங்குகிறோம், செய்திதாள் என்றால் என்ன..? உலக நடபைப்பற்றி எதாவது செய்திகள் இருந்தால்தானே அது செய்திதாள் இல்லையென்றால் என்ன அது..? விளம்பரத்தாள். அதைத்தான் நாம் நமது பணம் செலவிட்டு வாங்குகிறோம். இது நம் அனைவரையும் முட்டாள்களாக்கி பத்திரிகைகள் பணம் சம்பாதிக்க கையாளும் யுக்தி அல்லவா..? முன்பெல்லாம் பத்திரிகையில் ஏதாவது ஒரு சில இடங்களில்தான் விளம்பரங்கள் வரும் ஆனால், தற்பொழுது ஏதோ  ஒரு  சில இடங்களில்தான் செய்திகள் வருகின்றன. அதுவும் அந்த கட்சி சார்ந்த செய்திகள் மட்டும்தான்.     
        
      நமது தமிழ் பத்திரிக்கைகளில் ஒன்று “தமிழகத்தின் முதல் வார இதழ்” என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் வார இதழ், அதை நான் கடந்த 7 ஆண்டுகளாக படித்து வருகிறேன். வழக்கம் போல் தீபாவளி சிறப்பு(special) வாங்கினேன், வழக்கத்திற்கு மாறாக ஒரு அதிர்ச்சி என்ன தெரியுமா...? அதிக பக்கங்கள் என்றுதான் சொன்னார்கள், பின்புதான் தெரிந்துகொண்டேன் அது அதிக விளம்பர பக்கங்கள் என்று. மொத்தம் 180 பக்கங்கள் அதில் 39 பக்கங்கள் அனைத்தும் முழுப்பக்க விளம்பரங்கள், அதிலும் முதல் 4 பக்கங்கள் விளம்பரங்கள். அவர்களின் நோக்கம் மக்களிடம் சமூகத்தின் மீது விழிப்புணர்வு ஏற்படுத்தவா..? அல்லது விளம்பரத்தின் மூலம் பணம் சம்பாதிப்பதா..?  தற்பொழுது சொல்லுங்கள் நம்மை வைத்து அவர்கள் பணம் பார்க்கிறார்களே அவர்கள் அறிவாளிகள் தானே?


                                               
       
பிச்சைப்பாத்திரம்

       பிச்சை என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது நம்மூர் பிச்சைக்காரர்கல்தான். நாம் ஒவ்வொருவரும் அவர்களைப்பார்த்து இரண்டு செயல்களை கட்டாயம் செய்வோம் ஒன்று வருத்தபடுவது, இனொன்று முகம் சுளிப்பது. இதில் என்ன பயன்..? நம்மில் சிலர் பிச்சை போட்டுவிட்டு வந்து பெருமூச்சி விடுவார்கள் நாம் ஒரு நல்லகாரியம் செய்தோம் என்று தவறில்லை ஆனால் உங்கள் பணம் இயலாதவருக்குத்தான் போனது என்று உங்களுக்கு எப்படி தெரியும்...?. சரி அதை விட்டுவிடுங்கள் எதனால் அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள்? இதை நாம் ஒரு மூன்று விதமாக பிரித்துக்கொள்வோம்.
 
ஒன்று அவர்களின் இயலாமை அல்லது சோம்பேறித்தனம். இயலாமை என்றால் உடல் ஊனமுன்றவர்கள் அல்லது பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள்(வயதானவர்கள்), இவர்களில் இவரொருவருக்கேனும் நீங்கள் செய்த தர்மம் போய்ச்சேர்ந்திருந்தால் நீங்கள் சந்தோசமாக எடுத்துகொள்ளுங்கள். ஆனால் அநாதை என்று சொல்லும் சிறுவர்களுக்கு மட்டும் பிச்சை போடாதிர்கள் நாளை அவர்களுக்கு பணமில்லை என்றால் ஒரு திருடனாக வாய்ப்புள்ளது, அவர்கள் அப்படியாக நீங்களும் ஒருகாரனமாகலாமா..?. சோம்பேறி என்றால் அதில் அந்த சிறுவயது பிச்சைகாரர்களும் அடங்குவார்கள் அவர்களைத்தான் நாம் சிறுவயதிலே சோம்பேறியாக்கிவிட்டோமே. அவர்களுக்கு அனைத்தும் ஆண்டவன் சரியாகத்தான் கொடுத்திருப்பார் ஆனால் அவர்கள் உள்ளத்தில் மட்டும் கடவுள் ஊனம் வைத்துவிட்டான் இவர்களையல்லாம் ஆண்டவனே நினைத்தாலும் திருத்தமுடியாது நீங்களும் நானும் என்ன செய்யமுடியும்.
 
இரண்டாவதாக நாம் பார்க்கப்போகும் ரகம் நோகாமலநொங்குத்திங்கும பலே ஜாம்பவான்கள், இவர்கள் எளியவழியில் சம்பாதிக்க நினைத்தவர்கள் அல்லது கற்றுக்கொண்டவர்கள். இவர்கள் எப்படி என்றால் தங்கள் சொந்தஊரில் பிச்சை எடுத்தால் இழிவு என்று வெளியூர்களுக்குச்சென்று தங்கள் சுயமரியாதை தொழிலை செம்மனே செய்பவர்கள். அதிலும் நமது தமிழன் ஒருபடி மேலே, உதாறினத்திற்கு நமது அண்டைமாநிலத்தில் உள்ள பெங்களூரில் மாநகராச்சி சிலநாட்களுக்கு முன் அனைத்து பிசைகரர்களையும்  பிடித்து மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு சென்றனர். அதில் நாம் வெட்கப்பட  வேண்டிய ஒரு விஷயம் என்னதெரியுமா..? மொத்தம் 600 பேரில் 438 பேர் தமிழன் இவர்கள் தாங்கள் சம்பாதிப்பதற்காக ஒட்டு மொத்த தமிழனையே அசிங்கப்படுதுகிறார்கள். இதில் ஒரு வேடிக்கை தெரியுமா...? இவர்களை போல் மகா நடிகர்கள் யாரையும் பார்த்திருக்க முடியாது, காசுக்காக கடவுள்தந்த கைகால் இருக்கும்போதே அதை ஊனமாக காட்டுகிறார்கள். ஒரு நாள் போக்குவரவு இயக்கச் சுட்டுக்குறி (traffic singal) யில் நான் பார்த்து அதிர்ந்துபோன ஒரு காட்சி, மகிழுந்து(car) உயரம்தான் ஒருசிறுவன் இருப்பான் கால்கள் இரண்டும் வராதநிலையில் ஊன்றுகோல் உதவியுடன் மெதுவாக ஒவ்வொரு வாகனமாக சென்று பிச்சையெடுத்தான் பார்ப்பதற்கு மனம் வருத்தமாக இருந்தது, போக்குவரவு இயக்கச் சுட்டுக்குறி (traffic singal) பசைவிளக்கை விளக்கைபோட்டவுடன் அந்த சிறுவன் அந்த இரண்டு ஊன்றுகோல்களையும்  கையில்யெடுத்கொண்ணடு சென்றான், அந்தக்காட்சியை நீங்களும் பார்த்திருக்கலாம். இதற்குக்காரணம் அவனின் பெற்றவர்களா? அல்லது இந்த சமூகமா?.

மூன்றாவதாக நான் சொல்லவருவது, நமது தமிழ் சினிமா நான் கடவுள் படத்தில் கான்பித்ததுபோல்  வேரு சிலர் யாரோ சம்பாதிப்பதற்காக அவர்களை அடிமையாக்கி பிச்சையெடுக்க வைதிருகிறார்களோ என்னவோ?.அப்படியும் ஒரு கும்பல் வளம்வந்துகொண்டுதான் உள்ளனர். இன்னும் கொடுமை என்னவென்றால் ஊனமாக்கப்படுகிறார்கள். பணமென்ற ஒரு பேய் எப்படியெல்லாம் நம் மனித இனத்தை ஆட்டிப்படைக்கிறது. இதை நமது அரசாங்கமும் கண்டுகொள்ளாது, அவர்களும் நாம் பார்த்த ஏதோ ஒருவழியில் பிசையெடுத்துகொண்டுதான் இருப்பார்கள். அவர்களும் நம்மைப்போல் மனிதர்கள்தான்.