நட்பு

  நட்பு கொள்ளாதவர்கள் இவ்வுலகில் எந்த ஒரு மனிதனும் இருக்க முடியாது அப்படி எவரொருவரேனும் இருந்தால் அவர் கண்டிப்பாக மனிதனாக இருக்க முடியாது. நட்பை பற்றி பலரும் ஆழமாகவும் மிக அழுத்தமாகவும் சொல்லிருகிரர்கள் மேலும் நமது தமிழ் படம்(சினிமா) கூட நிறைய வழிகளில் சொல்லிருகின்றது. நாம் இன்று வரை நட்பிற்கு இலக்கணம் கர்ணனைதான் என்று சுட்டிக்காட்டுகிறோம் ஆனால் நாம் நடப்பு கொள்ளும் ஒவ்வொரு நண்பரும் கர்ணன்தான்!..எவ்வுலகில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு உறவு நட்பு ஒன்றுதான் மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் திருவள்ளுவர் நட்புடமையை பற்றி மிகவும் ஆழமாக சொல்லி இருப்பார்.


"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
                              இடுக்கண் களைவதாம் நட்பு." 

 

சங்கு அண்ணன் வாழ்க
இந்த வார்த்தையை கேட்டாலே என் நண்பர்கள் கோபமாகிவிடுவார்கள் நான் அப்படி அவர்களை தொந்தரவு செய்வேன் என்னிடம் ஏதாவது உதவி வேண்டும் என்றால் செய்வேன் ஆனால் முடிவில் சொல்லும் வார்த்தை சங்கு அண்ணன் வாழ்கனு சொல்லு மச்சி நான் கொடுக்கிறேன் என்று சொல்வேன்... உதாரினதிற்கு நான் என் நண்பர்கள் கார்த்திக் மற்றும் குரு மூவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒரு நேர்முக தேர்விற்கு சென்றோம் நாங்கள் மூவரும் காலை உணவு உண்ணவில்லை இந்நிலையில் நேர்முகத்தேர்வு முடிய மதியம் 2 மணி ஆகிவிட்டது மூவருக்கும் நல்ல பசி மூவரும் ஒரு சிற்றுண்டிக்கு சென்றோம் அங்கு 3 தட்டு சாம்பார் சாதம் வாங்கிவந்து மூவரும் அமர்ந்தோம் பின்பு உண்ணவும் துவங்கிவிட்டோம் கார்த்திக் முதல் உணவை எடுத்து வாயருகே கொண்டு சென்ற உடன் சடென்று அவன் கையை பிடித்து கொண்டு சங்கு அண்ணன் வாழ்கனு சொல்லு மச்சி அப்புறம் சாப்பிடு என்றேன் அவன் வாழ்கையே வெறுத்து விட்டான்..இன்று வரை அவனுக்கு என்னைபார்தால் பயம்.
என் இன்னொரு நன்பர் அழகுராஜன் என்னிடம் ஏதாவது கேட்டல் நான் சங்கு அண்ணன் வாழ்கனு சொல்லுடா என்று சொன்னால் அவன் என் உதவியே வேண்டாம் என்று சொல்லிவிடுவான் ஒரு நாள் அவனும் சொல்லுவான் "நட்புல இதெல்லாம் சகஜம்தானே"

No comments:

Post a Comment