காதல்

                                     இன்றைய காதல்!          


 காதல்!...இந்த வார்த்தையை சொல்லும் பொழுதே நம்மில்
 பலருக்கு பல நினைவுகள் வந்து போகும், காரணம் காதல் இல்லாமல் எந்த உயிரினமும் இவ்வுலகில் இல்லை அத்துடன் நம்மில் பலர் காதல் என்றால் ஆண், பெண் இருவருக்கும் சொந்தமானது என்று நினைக்கிறோம். தாய் குழந்தை மேல், குழந்தை தாய் மேல்,அண்ணன் தங்கை மேல், தங்கை அண்ணன் மேல் நமக்கு பிடித்தவர்கள் மேல்,கடவுளின் மேல், நமக்கு பிடித்த செல்ல பிராணிகள் மேல், நமக்கு பிடித்த பாடலின் மேல், ஏன் இன்னும் சொல்ல போனால் நமக்கு பிடித்த பொருளின் மேல் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..........


             ஆனால் இத்தனை உறவுகளுக்கும்,நமக்கு பிடித்தவைகளுக்கும் இல்லாத ஒரு அற்புதம், ஒரு ஈர்ப்பு, ஒரு வேகம் இந்த ஆண்,பெண் காதலுக்கு உள்ளது இன்னும் ஆழமாகச்சொன்னால் விலை மதிப்பற்ற உயிரையும் விடத் தயாராக உள்ள உறவு, இந்த ஆண்-பெண் காதல்தான். இன்று நம் தமிழ் சினிமா படங்கள் அனைத்திலும் காதல் கலந்திருக்கிறது....ஆனால் நாம் தெரிந்தோ தெரியாமலோ காதல் உள்பட அனைத்திலும் மேலைநாட்டவர் கலாச்சாரத்தை பின்பற்றுகிறோம்..மிக முக்கிய காரணம் நமது சினிமாதான். நம்மில் பலர் சினிமாவை பார்த்துதான் காதலிக்கவே தொடங்குகிறார்கள்...ஒரு ஆண் பத்து பெண்ணைகளை காதலிப்பதும், ஒரு பெண் பத்து ஆண்களை காதலிப்பதும் நமது சினிமாவின் பொழுதுபோக்காகிவிட்டது இதையே நமது இன்றைய தலைமுறையின் வேதமாகிவிட்டது...


             அனைத்திலும் அவசரம், காதல் சொல்வதிலும் அவசரம் பின்பு பிரிந்து செல்வதிலும் அவசரம், ஏதோ ஒரு எதிர்பார்ப்போடு சேருகிறார்கள் பின்பு சரிவரவில்லை என்றால் பிரிந்துவிடுகிறார்கள் நாம் 2010 ல் உள்ளோம் வாஸ்தவம்தான் அதற்கு இவ்வளவு அவசரமா?....


              காதலின் வெற்றி திருமணம்தான் என்று நினைத்துகொண்டுள்ளோம் அதுவல்ல அவளின் அன்பான பேச்சும் கூடத்தான் என்று அவளுக்கு திருமணமாகியும் நினைத்துக்கொண்டு இன்று வரை அவளின் நினைவோடு வாழ்ந்து கொண்டு உள்ளார் என்னுடைய நண்பர் ஒருவர்...இப்படியும் காதலிக்கத்தான் செய்கிறார்கள்...


             காதல் ஒருவரை மகானாகவும் மாற்றும், அதே சமயம் ஒருவரை மிருகமாகவும் மாற்றும்..நம்மில் காதலில் வெற்றி கொண்டவர்கள் சிலர்தான் இருப்பார்கள், பலர் தன் காதலை சொல்லாமலே மறைத்தவர்களும், தன் காதலை சொல்லியும் நிராக்கரிக்கப்பட்டவர்கள், அங்கீகரிக்கப்பட்டும் பிரிந்தவர்கள் மற்றும் சமூகத்தால் பிரிக்கப்பட்டவர்கள் எத்தனை எத்தனை காதல் ஜோடிகள்...அத்தனை பேரும் தன் காதலை ஒரு ஓரம் வைத்துவிட்டு வாழ்ந்துகொண்டுதான் உள்ளனர்.....காதலோடு வாழு கடவுளோடு சேரு....மன்னிக்கவும் நான் சொன்ன அர்த்தம் அனைத்து ஜீவராசிகள் மேல் அன்பு வை என்று...அப்படியானால் நீங்கள் கடவுள்தானே?..