Monday, October 25, 2010

நிழலாய் நின்றிருப்பேன்..


பார்த்து பேசி பலநாட்கள் ஆகிவிட்டது
நேற்றுதான் நம் கல்லூரி வாழ்கை 
துவங்கியது போல் உள்ளது...
ஆனால் 7 ம் ஆண்டை தொட்டுவிட்டோம்,
நமது நட்புக்கு   வயது 7 ...     
நான் உனக்காக கிறுக்கிய வரிகள் ஆயிரம்..
ஆனால் அத்தனையும் இருளில்
வரைந்த ஓவியமாய்....ஆனால்?.
இன்று நம் நட்பை காவியமாய்
படைக்க இதோ கிறுக்குகிறேன்... 
உனக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம்...
நிஜங்கள் எனக்கு கை கொடுப்பதில்லை...
கனவுகள் உனக்கு கை கொடுப்பதில்லை...
இருந்தும், நம்பிக்கையின் பாதையில், ஊர்ந்து கொண்டிருக்கிறோம்...
சில உறவுகளுக்கு அர்த்தங்கள் இல்லை...
நீ இல்லையேல், வாழ்வில் அர்த்தம் இல்லை...
இந்த வார்த்தைகள், நேரம் தாழ்ந்தாலும், நேசம் தாளாது ...
என் வெற்றியில் உன் பங்கிருக்கும்...
உன் வெற்றியில், நிச்சயம் என் பங்கிருக்கும்...
நேரில் பார்க்காவிட்டாலும்...
நேரம் கிறுக்கி விட்டது..
நம் நட்பை...
கிறுக்களும் காவியமாகிவிட்டது...
இது அதிசயம்...
என்றும் உன் அருகில் இருப்பேனா என்பது எனக்கு தெரியாது..
ஆனால்...
நட்பென்னும் நிழலை கொண்டு நான் நின்றிருப்பேன்...
உனக்காக.. 

2 comments:

  1. இனிய "கவி"தை ....

    ReplyDelete
  2. //நிஜங்கள் எனக்கு கை கொடுப்பதில்லை...
    கனவுகள் உனக்கு கை கொடுப்பதில்லை...//

    வலிகளை உணர்த்தும் வரிகள் இவை... கவிதை அருமை!

    ReplyDelete